Press "Enter" to skip to content

பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக மட்டும் ரூ.600 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கினார் நிர்மலா சீதாராமன்

டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக்காக மட்டும் ஓராண்டுக்கு சுமார் 600 கோடி ரூபாய் ஒதுக்கி அறிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தன் பாதுகாப்புப் படையினராலேயே கொல்லப்பட்ட பிறகு பிரதமருக்கு எனத் தனிச் சிறப்பு பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. அதன்படி உருவாக்கப்பட்ட அமைப்புதான் சிறப்பு பாதுகாப்புக் குழு (எஸ்.பி.ஜி) . முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பால் கொல்லப்பட்ட பிறகு இந்த பாதுகாப்பு முன்னாள் பிரதமர் குடும்பத்தினருக்கும் விரிவு படுத்தப்பட்டது.

இதன்படி சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கும் எஸ்.பி.ஜி பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டது.

எஸ்.பி.ஜி பாதுகாப்பு என்பது பாதுகாப்பு என்பதை தாண்டி ஒரு கௌரவமாக பார்க்கப்பட்டது. இதனிடையே எஸ்.பி.ஜி என அழைக்கப்படும் கருப்பு பூனை பாதுகாப்பு படை பிரதமர் மோடிக்கு மட்டும் வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக 28 ஆண்டுக்கு பின்னர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதேபோல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முதல்வர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் ஆ கியோருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டது.

தற்போது இந்தியாவில் (எஸ்.பி.ஜி) சிறப்பு பாதுகாப்புக் குழு கொண்ட ஒரே மனிதர் பிரதமர் மோடி உள்ளார். அவரது பாதுகாப்புக்காக சுமார் 592.5 கோடி ரூபாயை இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒதுக்கி உள்ளார். கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக 540 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. முன்னதாக 2018 ம் ஆண்டு 420 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது ஒரே ஆண்டில் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக 52 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »