Press "Enter" to skip to content

வாவ்.. ஏழே நாளில் 1000 படுக்கைகள்.. ஆஸ்பத்திரி.. கட்டி முடித்து சாதித்தது சீனா! மிகுதியாக பகிரப்பட்ட காணொளி

பெய்ஜிங்: சீனாவின் வுகான் நகரில் 7 நாளில் 1000 படுக்கைகள் கொண்ட பிரம்மாண்ட மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்வர்களுக்காக இந்த மருத்துவமனையை கட்டி முடித்துள்ளது சீனா. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். சீனாவில் உள்ள வுகான் நகரம் மொத்தமும் மோசமான பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்காக போராடி வருகிறது.

இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. சீனாவைத்தாண்டி பிலிப்பைன்ஸில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அவரும் வுகானில் இருந்தவர் என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் கூறினார்கள்.

imageமாட்டு சாணம் பூசுங்கள்.. கோமியம் குடியுங்கள்.. கொரோனாவை போக்க ஒரே வழி.. இந்து மகா சபா தலைவர் யோசனை

வுகான் மருத்துவமனை

இந்நிலையில், வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சீன அரசு மருத்துவமனை ஒன்றை வுகானில் துரிதமாக கட்டி முடித்துள்ளது. 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை சீனா கட்டி முடித்துள்ளது. ஜனவரி 25ம் தேதி மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் .துரிதமாக கட்டி முடிக்கப்பட வேண்டுமென்பதற்காக இரவு பகலாக பணிகள் நடந்தது.

1400 அதிகாரிகள்

7 நாளில் இந்த மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டி முடித்துள்ளது, நாளை முதல் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வருகிறது.. 1400 ராணுவ மருத்துவ அதிகாரிகளை அனுப்ப சீன அரசு அனுமதி அளித்திருக்கிறது. இந்நிலையில். கட்டடம் கட்டப்பட்டது தொடர்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ

ஜனவரி 29,30,31 ஆகிய 3 நாட்களில் கட்டடம் எப்படி கட்டப்பட்டது என்பதை விவரிக்ககிறது அந்த வீடியோ. இப்போது முழுமையாக மருத்துவமனை கட்டி முடித்து அசத்தி உள்ளது சீனா. நாளை திங்கள்கிழமை மருத்துவமனை திறப்பு விழா நடக்கிறது. என்ன ஒரு அசாத்தியமான அதிரடியை சாதித்துள்ளது சீனா.

நாளை திறப்பு

சீனாவின் வுகான் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை உருவாக்க பல ஆயிரம் பேர் திட்டமிடுதலுடன் இரவு பகலாக பணியாற்றினார்கள். ஒவ்வொரு பணியையும் இயந்திரங்கள் உதவியுடன் சட்டென முடித்தனர். மிக நேர்த்தியான 3டியில் வடிவமைக்கப்படும் கலையை போல் இந்த கட்டிடத்தை வடிமைத்து அசத்தி உள்ளது. இதில் பல்வேற வசதிகளையும் கொண்டு வந்துள்ளது. நோயாளியாக மாறிய தன் மக்களுக்காக ஆறே நாளில் 1000 படுக்கை மருத்துவமனை கட்டியது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »