Press "Enter" to skip to content

வரலாறு காணாத பொருளாதார சரிவு.. மீண்டு வர பல வருடங்கள் ஆகும்.. சீனாவை புரட்டிப்போட்ட கொரோனா!

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக வரலாறு காணாத பொருளாதார சரிவு ஏற்பட தொடங்கி உள்ளது. இன்று அந்நாட்டு மார்க்கெட் பெரிய அளவில் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

சீனா தற்போது உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இருக்கிறது. 2025ல் உலகில் நம்பர் 1 நாடாக சீனா இருக்கும். ஏற்கனவே ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சீனாதான் உலக அளவில் முதலிடத்தில் இருக்கிறது.

சீனாவின் தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானம், உள்நாட்டு உற்பத்தி, சுற்றுலா ஆகியவை அந்நாட்டை மிகப்பெரிய அளவில் முன்னேற்றி உள்ளது. அமெரிக்காவே சீனாவை பார்த்து நடுங்கும் அளவிற்கு அதன் வளர்ச்சி அதீத உயரத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

image ஆஹா.. என்னம்மா குத்தாட்டம் போடுறாங்க.. கொரோனா பீதியில் சீனாவில் இருந்து வந்த இந்திய மாணவர்கள்

சீனா எப்படி

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டு பொருளாதாரமே சரிய தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது. சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு இதுவரை 314 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் இதுவரை 14500 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

உலகம் முழுக்க

உலகம் முழுக்க தற்போது பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. ஆனால் சீனாவை இந்த மந்த நிலை பெரிய அளவில் பாதிக்கவில்லை. சீனா தற்சார்பு கொள்கை கொண்ட நாடு என்பதால் அந்நாட்டை இந்த மந்தநிலை பெரிதாக பாதிக்கவில்லை. ஆனால் இந்த கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் பொருளாதாரம் முடங்க தொடங்கி இருக்கிறது. ஆம் அசைக்கவே முடியாமல் வலுவாக இருந்த சீனாவின் பொருளாதாரத்தை இந்த வைரஸ் அசைத்து பார்த்துள்ளது.

ஏற்றுமதி எப்படி

சீனாவில் தற்போது ஏற்றுமதி மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா துறை மொத்தமாக படுத்துள்ளது. ஹோட்டல்கள், விடுதிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளிகள் இயங்கவில்லை. அங்கிருக்கும் கூகுள் நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. பல்வேறு ஐடி நிறுவனங்கள் மொத்தமாக மூடப்பட்டு இருக்கிறது. இதனால் அந்நாட்டு உற்பத்தி, தொழில்கள் , பணிகள் எல்லாம் முடங்கி உள்ளது. 20 நாட்களாக அங்கு இந்த நிலைமைதான் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

என்ன மார்க்கெட்

இதனால் தற்போது அந்நாட்டு மார்க்கெட்டும் மொத்தமாக சரிந்துள்ளது. அதன்படி அந்நாட்டு பங்கு வர்த்தக புள்ளி 8.7% சரிந்துள்ளது. 259 புள்ளிகள் சரிந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் சீனாவின் மார்க்கெட் இவ்வளவு சரிவை சந்தித்ததே கிடையாது. சீனாவின் மிக முக்கியமான நிறுவனங்கள் எல்லாம் இதனால் சரிவை சந்தித்துள்ளது. 10 வருடங்களாக தொடர்ந்து முன்னேறி வந்த நிறுவனங்கள் தற்போது சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாறு காணாத சரிவில் இருந்து வெளியே வர சீனாவிற்கு பல வருடங்கள் ஆகும் என்றும் கூறுகிறார்கள்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »