Press "Enter" to skip to content

பாதை உயரமாகி விட்டதால் வயலுக்கு செல்ல வழியின்றி நெற்பயிரை அறுவடை செய்ய முடியாத அவலம்: தொடர்வண்டித் துறை தரைபாலம் அமைத்து தர விவசாயிகள் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி: அகலரயில்பாதை உயரமாகி விட்டதால் வயலுக்கு செல்லர வழியின்றி நெற்பயிரை அறுவடை செய்ய முடியாத அவலம் உள்ளது. இதனால் ரயில்வே தரைப்பாலம் அமைத்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு கிராமத்தில் திருத்துறைப்பூண்டி – கோடியக்கரை ரயில்வே இரும்பு பாதை வழித்தடத்தில் 5 கிமீ தூரத்தில் கட்டிமேடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு ரயில்வே இரும்பு பாதை கட்டிமேடு தெற்கு தெரு கடைசியாக ரயில்வே கேட்கிராஸிங் பாதை ஒன்று இருந்தது. தற்போது திருத்துறைப்பூண்டி – கோடியக்கரை அகல ரயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் ரயில் பாதை உயரமாக உள்ளது.

இதனால் மேற்கு புறம் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் ஏற்கனவே இருந்த சாலை பள் மாக போய்விட்டது.
இந்த வழியாக விவசாயம் செய்வதற்கு டிராக்டர் நெல் ஏற்றி வர முடியவில்லை. எனவே பாதை இருந்த அதே இடத்தில் விவசாய நிலங்களுக்கு கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதிக்கு சென்று வர தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்று கட்டிமேடு அனைத்து விவசாய சங்கள் சார்பில் பிரதமர், மத்திய ரயில்வே அமைச்சர்,திருச்சி் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறி கையில் கட்டிமேடு பகுதியில் இருந்து ரயில்வே பாதையில் மூன்று பாதை இருந்தது. இந்த வழியாக டிராக்டர் சென்று வந்தது. தற்போது அகலரயில் பாதையால் டிராக்டர் போக முடியாது.

இதனால் சுமார் 1000 ஏக்கரில் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே ரயில்வே நிர்வாகம் விவசாயிகள் நலன் கருதி முன்பு இருந்த இடத்தில் தரை பாலம் அமைத்து தரவேண்டும் என்றனர். இதுகுறித்து கட்டிமேடு ஊராட்சி மன்றதலைவர் மாலினி ரவிச்சந்திரன் கூறுகையில், அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் ரயில்வே துறைக்கு கோரிக்கை மனு அனுப்பபட்டுள்ளது. மேலும்அனைத்து விவசாய சங்கள் சார்பில் வரும் 8ம் தேதி சனிக்கிழமை போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர் என்றார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »