Press "Enter" to skip to content

புதிய வருமான வரி ஆப்ஷனால் நமக்கு கிடைக்கப்போவது என்ன? ஆஹா..ஒரே காணொளி.. எல்லாம் சொல்லிடுச்சே

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், ஆப்ஷனலாக வழங்கியுள்ள தனி நபர் வருமான வரி விகிதம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரி விகிதங்களை குறைப்பதாக நிர்மலா அறிவித்திருந்தாலும், ஏற்கனவே பெறக்கூடிய முதலீட்டு வரிக் கழிவு சலுகைகளை மறுப்போருக்கு மட்டுமே இந்த புதிய வருமான வரி விகிதங்கள் பொருந்தும் என்று ஒரு செக் வைத்துவிட்டார் நிதியமைச்சர்.

நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு வெளியானபோது மாத சம்பளதாரர்கள் ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால், பின்னாடியே இப்படி ஒரு ஆப்ஷனல் என்ற வார்த்தையை அவர் சேர்த்ததுமே புஸ் என்று போய்விட்டது.

நமக்கு எந்த வருமான வரி ஆப்ஷன் சரியாக இருக்கும் என்ற சந்தேகத்துடன், கால்குலேட்டரும் கையுமாக நமது மக்கள் அலைகிறார்கள். அடடே புது அறிவிப்பில் லாபம் வருதே என யோசிக்கும்போதே, வேண்டாம்ப்பா, 80சியில் முழு வரி கழிவையும் பெற்றுவிட்டால், பழசுதான் நமக்கு லாபமா இருக்கும் என மனசாட்சி சொல்ல ஆரம்பித்துவிடும்.

New income tax Regime 😜😜 pic.twitter.com/ohhtDFNHva

— Shruti Ahuja (@shrutiahuja110)

February 1, 2020

ஒரு திரைப்படத்தில் எஸ்.ஏ.சூர்யா, “இருக்கு..ஆனா இல்ல..” என்று சொல்லி மனநல மருத்துவரான ஊர்வசியை குழப்பி எடுத்துவிடுவார். அப்படித்தான், இப்போது நிர்மலா பட்ஜெட்டும் இருக்கிறது. நமக்கு ஏதாவது நன்மை இருக்குற மாதிரியே இருக்கு, ஆனால் இல்லைங்கிற மாதிரியும் இருக்கு என மாத சம்பளதாரர்கள் விழிபிதுங்கியுள்ளனர்.

imageநேபாளத்துக்கு நிதியை குறைத்த நிர்மலா பட்ஜெட்!

இந்த நிலையில்தான், ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதில் ஒரு நாய்க்கு கண்ணாடி மேஜைக்கு அந்த பக்கம் நின்றபடி பிஸ்கெட் போடுவதை போலவும், பிஸ்கட் தன்னை நோக்கி வருகிறது என்று அந்த செல்லப் பிராணி யோசிப்பதை போலவும் உள்ளது. இப்படித்தான் கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியாத நிலையில் மிடில் கிளாஸ் இருக்கிறது என்று சொல்கிறது இந்த வைரல் வீடியோ.

என்ன பாஸ், உங்களுக்காவது புரிந்ததா? எந்த ஆப்ஷன் நல்லது என்று?

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »