Press "Enter" to skip to content

இந்திய அணியில் இருக்குற ஒரே ஒரு குறை இதுதான்.. நறுக்குனு சுட்டிக்காட்டிய அக்தர்

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து வென்றது இந்திய அணி. இதையடுத்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி தொடரை வென்றுவிட்டது. முதல் ஒருநாள் போட்டியில் 348 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டி வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் 274 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணியை அடிக்கவிடாமல் தடுத்து வெற்றி பெற்றது. 

ஒரு போட்டியில் சேஸிங், இன்னொரு போட்டியில் டிஃபெண்டிங் என இரண்டையுமே சிறப்பாக செய்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளிலுமே ரோஸ் டெய்லர் நாட் அவுட். இரண்டு போட்டிகளிலுமே சிறப்பாக ஆடிய ரோஸ் டெய்லரை இந்திய அணியால் வீழ்த்த முடியவில்லை. முதல் போட்டியில் சதமடித்த டெய்லர், இரண்டாவது போட்டியில் 74 ரன்கள் விளாசினார். 

இந்நிலையில், இந்த தோல்வி இந்திய அணிக்கு தேவை தான் என்றும் இதுவொரு பாடமென்றும் அக்தர் கூறியுள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள ஷோயப் அக்தர், டெய்லரை வீழ்த்துவதற்கு இந்திய அணியில் யாரிடமும் திட்டமில்லை. 7-8 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்திய பின்னர், அப்படியொரு வலுவான நிலையிலிருந்து போட்டியை நழுவவிட்டது எப்படி என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்திய அணியில் ஸ்டிரைக் பவுலர் இல்லை என்ற குறை உள்ளது. குல்தீப்புக்கு பதிலாக அணியில் இணைந்த சாஹல் நன்றாக பந்துவீசினார். ஆனால் இந்திய அணிக்கு விக்கெட் தேவைப்படும்போது, விக்கெட்டை வீழ்த்திக்கொடுக்கக்கூடிய பவுலர் இல்லை. 

இந்திய அணி, இந்த போட்டியில் மிக சுமாராகவே ஆடியது. டி20யில் ஒயிட்வாஷ் ஆனபிறகு, அதிலிருந்து மீண்டு ஒருநாள் தொடரை வென்ற நியூசிலாந்து அணிக்குத்தான் எல்லா கிரெட்டிட்டும். இந்திய அணிக்கு இந்த தோல்வி ஒரு பாடம் என்று அக்தர் கூறியுள்ளார். 
 

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »