Press "Enter" to skip to content

காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் 60 சதவிகிதம் குறைந்துள்ளது – டிஜிபி தில்பக் சிங்

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை ஒப்பிடும் போது இந்த ஆண்டு பயங்கரவாத சம்பவங்கள் 60 சதவிகிதம் குறைந்துள்ளது என டிஜிபி தில்பக் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் டிஜிபி தில்பக் சிங் இன்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து டிஜிபி உள்துறை மந்திரியிடம் விரிவான ஆலோசனை நடத்தினார். 

இந்த சந்திப்பின் போது காஷ்மீரில் இந்த ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத சம்பவங்கள் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. டிஜிபி தில்பக் சிங் தாக்கல் செய்த அந்த அறிக்கையின் விவரங்கள் பின்வருமாறு:-

”ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஒன்றரை மாதங்கள் வரையில் நடைபெற்ற பயங்கரவாத சம்பவங்களுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு பயங்கரவாத சம்பவங்கள் 60 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.

பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கை போதும் , பயங்கரவாதிகளுடன் என்கவுன்டர் நடைபெறும் பகுதிகளிலும் கல் எறி சம்பவங்கள் எதும் நடைபெறவில்லை. மேலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் மிகப்பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. 

இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கம் முதல் நேற்று வரை (பிப்ரவரி 13) ஜம்மு-காஷ்மீரில் 20 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »