Press "Enter" to skip to content

சமாஜ்வாதி கட்சியின் ஆசம்கானை குடும்பத்துடன் சிறையில் தள்ளிய கோர்ட்

மோசடி வழக்கு ஒன்றில் சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. ஆசம் கான், அவரது மனைவி மற்றும் மகன் என குடும்பத்தினருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதி எம்.பி.யும், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவராக செயல்பட்டுவருபவர் ஆசம் கான். இவரது மனைவி தன்ஜீன் பாத்திமா மற்றும் மகன் அப்துல்லா ஆசம்.  கான் மீது நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், எம்.எல்.ஏ.வாக செயல்பட்டுவந்த ஆசம் கானின் மகன் அப்துல்லா ஆசம் மீதும் பிறந்த தின ஆவணங்களில் மோசடி செய்துள்ளார் என வழக்கு பதிவானது.  மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட பின்னர் சட்டசபை உறுப்பினர் பதவியையும் அவர் இழந்து விட்டார்.

கடந்த வருடம் ஜூலையில் ஆசம் கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக 4-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின.  இதனால் நேரில் ஆஜராகும்படி ராம்பூரில் உள்ள நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது.

ஆனால், சமாஜ்வாதி கட்சி தலைவர்களின் குடும்பத்தினர் யாரும் நேரில் ஆஜராகவில்லை. இதற்கிடையில் முன்ஜாமீன் கோரிய அவரது மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. 

மேலும், நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், வழக்குகளில் ஒன்றில் கான் உள்ளிட்ட குடும்பத்தினரை கைது செய்ய வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன.  பின்னர் அவர்களின் சொத்துகளை முடக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட நீதிமன்றத்தில் கான் மற்றும் அவரது மனைவி, மகன் என குடும்பத்தினர் நேற்று சரண் அடைந்தனர்.  அவர்களுக்கு வரும் மார்ச் 2-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து எம்.பி. ஆசம் கான், அவரது மனைவி மற்றும் மகன் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »