Press "Enter" to skip to content

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாளை சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன.

சென்னை:

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடந்த சில தினங்களாக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாளை நாடு முழுவதும் பொதுமக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் யாரும் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த சுய ஊரடங்கை மக்கள் வெற்றி பெறச் செய்து நோய்த் தாக்கத்தை தவிர்க்கும்படி பல்வேறு தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

சுய ஊரடங்கை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளது. நாளை இதனால் தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் 9 மணி வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காது. மெட்ரோ ரெயில்களும் இயக்கப்படாது. டாஸ்மாக் கடைகள் அனைத்தும் நாளை மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவின் தாக்கத்தை குறைக்கும் வகையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பயண கட்டுப்பாடுகள் மற்றும் சமூக தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »