Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எதிரொலி: திருப்போரூர் முருகன் கோவிலில் நடைபெற இருந்த திருமணங்கள் ரத்து

கொரோனா வைரஸ் எதிரொலியால் திருப்போரூர் முருகன் கோவிலில் நடைபெற இருந்த நிச்சயிக்கப்பட்ட திருமணங்க ளை கோவிலில் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்போரூர்:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புகழ்பெற்ற கோவில்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் பக்தர்களின் தரிசனத்திற்கு வருகிற 31-ந்தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 31-ந்தேதி வரை உள்ள சுபமுகூர்த்த நாட்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திருப்போரூர் முருகன் கோவிலில் திருமணங்களை நடத்த முன்பதிவு செய்திருந்தனர். கொரோனா வைரஸ் எதிரொலியால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை கோவிலில் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணங்கள் ரத்து செய்யப்பட்டதால் திருமண வீட்டார்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »