Press "Enter" to skip to content

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி – தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலானது

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, தமிழகத்தில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணியளவில் அமலானது.

சென்னை:

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 170-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலகளாவிய பலி எண்ணிக்கை 13 ஆயிரத்திற்கும் மேல் சென்றுள்ளது. உலகெங்கிலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதற்கும் ரெயில் சேவை வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன. பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணியளவில் அமலானது. பொது மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். அதே சமயம் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »