Press "Enter" to skip to content

சிஎன்என் தொகுப்பாளர் கிறிஸ்டோபர் குவாமோவுக்கு கொரோனா பாதிப்பு

சி.என்.என். தொகுப்பாளர் கிறிஸ்டோபர் குவாமோவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது. 

இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அங்கு வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சி.என்.என். தொகுப்பாளர் கிறிஸ்டோபர் குவாமோவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »