Press "Enter" to skip to content

24 மருந்து பொருட்கள் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு

24 மருந்துப் பொருட்களின் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீக்கி உள்ளது. இந்த புதிய ஏற்றுமதி உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கை மற்றும் எதிர்கால மருந்து தேவையை கருத்தில் கொண்டும் சில மருந்துப் பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. 

இந்தியாவில் மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோகுளோரோகுயின் என்ற மருந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளித்தது. எனவே, ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தின் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

இந்நிலையில், 24 மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியிருப்பதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

டினிடாசோல், மெட்ரோனிடசோல், அசைக்ளோவிர், வைட்டமின் பிஐ, வைட்டமின் பி 6 மற்றும் வைட்டமின் பி 12 உள்ளிட்ட மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. ஆனால், பாராசிட்டமால் மருந்து ஏற்றுமதிக்கான தடை நீக்கப்படவில்லை. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »