Press "Enter" to skip to content

இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு தானியம் வழங்க கோரிக்கை – பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

பிரதமர் மோடிக்கு, சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார். அதில், இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு தானியம் வழங்குமாறு கோரியுள்ளார்.

புதுடெல்லி:

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தற்போதைய கொரோனா வைரஸ் பிரச்சினையும், ஊரடங்கும் உணவு பாதுகாப்புடன் திகழ்ந்த ஏராளமானோரை உணவு பாதுகாப்பின்றி வறுமைக்கு தள்ளி உள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில், ஒருவரும் பட்டினி கிடக்கக்கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

அதன்படி, உணவு பாதுகாப்பு சட்ட பயனாளிகளுக்கு செப்டம்பர் மாதம்வரை தலா 10 கிலோ உணவு தானியம் வழங்க வேண்டும்.

மேலும், உணவு பாதுகாப்பு இல்லாத, ரேஷன் கார்டு இல்லாத இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தலா 10 கிலோ உணவு தானியங்களை 6 மாதங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

அவசர தேவைக்காக பெருமளவு உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள நாட்டில், லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி தவிப்பது மிகவும் துயரமானது.

இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »