Press "Enter" to skip to content

காலை முதல்-மந்திரியுடன் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.வுக்கு மாலை கொரோனா – அதிர்ச்சி தகவல்

குஜராத் மாநில முதல்மந்திரி தலைமையில் நேற்று காலை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது மாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்:

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 10 ஆயிரத்து 815 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 353 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மார்ச் 25 முதல் வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது. 

ஆனால், நேற்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாடிய பிரதமர் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், குஜராத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் அம்மாநில முதல் மந்திரி விஜய் ரூபானி தலைமையில் நேற்று நடைபெற்றது. 

காந்தி நகரில் உள்ள முதல்மந்திரி இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில துணை முதல் மந்திரி நிதின் பட்டேல், மாநில உள்துறை மந்திரி பிரதீப்சின் ஜடேஜா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் பங்கேறனர்.

இந்த கூட்டத்தில் அகமதாபாத் பகுதிக்கு உள்பட்ட ஹாடியா-ஜமால்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. இம்ரான் ஹிடவாலாவும் பங்கேற்றார். 

முதல் மந்திரி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் முடிவில் அகமாதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சீல் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், குஜராத் முதல்மந்திரி விஜய் ரூபானி தலைமையில் நேற்று காலை நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்ற ஹாடியா-ஜமால்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. இம்ரான் ஹிடவாலாவுக்கு நேற்று மாலை கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாநில முதல் மந்திரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ. இம்ரான் ஹிடவாலாவுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவருடன் கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.

குஜராத்தில் முதல்-மந்திரி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கு கொரோனா பரவியுள்ளதால் பல எம்.எல்.ஏ.க்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »