Press "Enter" to skip to content

கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியது

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 933 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

அதன்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,344 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 392 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »