Press "Enter" to skip to content

திருடர்கள் என பரவிய வதந்தி – 2 சாமியார்கள் உள்பட 3 பேர் அடித்து கொலை – மகாராஷ்டிராவில் பயங்கரம்

மகாராஷ்டிராவில் காரில் பயணம் செய்த 2 சாமியார்கள் உள்பட 3 பேரை திருடர்கள் என நினைத்து ஒரு கும்பல் அடித்தே கொன்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

மும்பை:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பல கிராமங்களில் மக்கள் தாங்களாக முன்வந்த தங்கள் கிராமங்களுக்குள் வெளி ஆட்கள் நுழையக்கூடாது என தடுப்புகளை அமைத்தும் வருகின்றனர்.

இந்த ஊரடங்கு காலத்தில் ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இரண்டு இந்து மத சாமியார்கள் உள்பட 3 பேரை திருடர்கள் என நினைத்து ஒரு கும்பல் அடித்தே கொன்ற கொடூர சம்பவ அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கன்டிவாலி பகுதியை சேர்ந்த இரண்டு சாமியார்கள் கடந்த வியாழக்கிழமை ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலம் சூரத்திற்கு வாடகை காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.   

இதற்கிடையில், மகாராஷ்டிராவின் பால்ஹர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் பலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக வதந்தி பரவி வந்தது. 

இந்த வதந்தி அப்பகுதியை சேர்ந்த கட்ஜின்ஜாலி கிராமத்திலும் பரவியவது. இதையத்து அந்த கிராமத்தினர் சிலர் கும்பலாக சேர்ந்து கிராமத்தை சுற்றிலும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்து வந்தனர்.

இந்நிலையில், இரண்டு சாமியார்களும் சென்ற கார் கட்ஜின்ஜாலி பகுதியை கடந்த போது அதை மறித்த அந்த கும்பல் அவர்களை திருடர்கள் என நினைத்து தாக்க முற்பட்டனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த கார் டிரைவர், 2 சாமியார்கள் அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்தனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் பயம் காரணமாக வீட்டில் பதுங்கி இருந்த கார் டிரைவர் உள்பட 3 பேரை மீட்டு வெளியே கொண்டு வர முற்பட்டனர். 

அப்போது அங்கு கூடியிருந்த ஒரு கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை கொண்டு போலீசார் உள்பட அனைவர் மீதும் தாக்குதல் நடத்தியது. 

குறிப்பாக திருடர்கள் என சந்தேகிக்கப்பட்ட 3 பேர் மீது அந்த கும்பல் கற்களை கொண்டு கொடூரமாக தாக்கியது. இந்த தாக்குதலில் 2 சாமியார்கள் மற்றும் கார் டிரைவர் என மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கிடையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து, இந்த வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய 100-க்கும் அதிகமானோரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »