Press "Enter" to skip to content

மகாராஷ்டிராவில் இன்று முதல் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி: உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் அரசின் கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் செயல்பட அனுமதி வழங்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.

மும்பை :

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதி சிவப்பு மண்டலமாகவும், 15 தொற்று நோயாளிகள் வரை உள்ள மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், பாதிப்பு இல்லாத பகுதி பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் மும்பை, மும்பை புறநகர், புனே, ராய்காட், தானே, சாங்கிலி, பால்கர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்கள் ஆரஞ்சு, பச்சை மண்டலமாகவும் உள்ளன.

இந்தநிலையில் மகாராஷ்டிராவில் பச்சை, ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க உரிய கட்டுபாடுகளுடன் அனுமதி வழங்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து முதல்-மந்திரி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள் கட்டுபாடுகளுடன் உற்பத்தியை தொடங்க 20-ந் தேதி (இன்று) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு தங்கும் இடவசதியை தொழிற்சாலைகள் செய்து கொடுக்க வேண்டும். தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல நீண்ட தூரம் பயணம் செய்ய கூடாது.

தொழிலாளர்கள் தங்க வைக்கப்படும் இடங்களுக்கு உணவு தானியங்கள் சப்ளை செய்யவும் மற்றும் தொழிற்சாலை உற்பத்தி பொருட்கள் கொண்டு செல்லவும் அரசு அனுமதி வழங்கும்.

மாநிலத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளும் சீல் வைக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. விவசாய பணிகள் தங்கு தடையின்றி அனுமதிக்கப்படுகிறது.

புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசு உணவு, இருப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு முடியும் வரை அவர்கள் இங்கேயை தங்கி இருக்க வேண்டும். ஊரடங்கு முடிந்த பிறகு அவர்கள் தங்களது சொந்த உருக்கு செல்லலாம்.

கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்கள் தங்களது நோயை மறைக்க கூடாது. ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்.

கொரோனா நோயாளிகள் அல்லாத மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஆஸ்பத்திரிகளும் முன்வர வேண்டும். இது தொடர்பாக நான் டாக்டர்களுடன் பேசி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பல்வேறு மாவட்டங்களில் தொழிற்சாலைகளை கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், மும்பை, தானே, பால்கர், புனே உள்ளிட்ட மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அடையாளப்படுத்தப்பட்டு இருப்பதால், இங்கு தொழிற்சாலைகளை திறக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »