Press "Enter" to skip to content

கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

கொரோனா தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையை இலவசமாக வழங்க கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

புதுடெல்லி:

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு முழுமையாக நீங்கும் வரை, இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கொரோனா தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையை இலவசமாக வழங்குமாறு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும் எனக்கோரி வக்கீல் அமித் திவிவேதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சய் கிஷண் கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர் நேற்று காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். விசாரணை தொடங்கியதும், “நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் எதற்கு மற்றும் யாருக்கு இலவச சிகிச்சை அளிப்பது என்பதை அரசாங்கம் முடிவு செய்யும். இதுபோன்று விளம்பரம் தேடும் வகையில் மனுக்களை தாக்கல் செய்யக் கூடாது” என்று கூறி அமித் திவிவேதியின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதே மனுதாரர், கொரோனா பாதிப்பைதொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்த மனுவும் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »