Press "Enter" to skip to content

ஒரு லட்சத்து 88 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 88 ஆயிரத்தை கடந்தது.

ஜெனீவா:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.  தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 88 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 26 லட்சத்து 97 ஆயிரத்து 316 பேருக்கு கொரோனா பரவியுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 17 லட்சத்து 68 ஆயிரத்து 514 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 20 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்த கொடிய வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 945 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 857 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகளின் விவரங்கள் வருமாறு:-

அமெரிக்கா – 48,868

ஸ்பெயின் – 22,157

இத்தாலி – 25,549

பிரான்ஸ் – 21,856

ஜெர்மனி – 5,367

இங்கிலாந்து – 18,738

துருக்கி – 2,491

சீனா – 4,632

பிரேசில் – 2,940

பெல்ஜியம் – 6,490

கனடா – 2,141

நெதர்லாந்து – 4,177

சுவிஸ்சர்லாந்து – 1,549

ஸ்வீடன் – 2,021

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »