Press "Enter" to skip to content

28 லட்சம் பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்தை கடந்தது.

ஜெனீவா:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்தை கடந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, 28 லட்சத்து ஆயிரத்து 65 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 18 லட்சத்து 29 ஆயிரத்து 861 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவர்களில் 58 ஆயிரத்து 368 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 

வைரஸ் பரவியவர்களில் இதுவரை 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் இந்த கொடிய வைரசுக்கு இதுவரை ஒரு லட்சத்து 95 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அதிகம் பரவியுள்ள நாடுகளின் விவரங்கள்:-

அமெரிக்கா – 9,03,775

ஸ்பெயின் – 2,19,765

இத்தாலி – 1,92,994

பிரான்ஸ் – 1,59,828

ஜெர்மனி – 1,54,159

இங்கிலாந்து – 1,43,464

துருக்கி – 1,04,912

ஈரான் – 88,804

சீனா – 82,804

ரஷியா – 68,622

பிரேசில் – 51,073

பெல்ஜியம் – 44,551

நெதர்லாந்து – 36,535

ஸ்விட்சர்லாந்து – 28,677   

இந்தியா – 23,452

போர்ச்சீகல் – 22,797

ஈக்வடார் – 22,719

பெரு – 21,648

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »