Press "Enter" to skip to content

எம்.பி.யின் குடும்பத்தினர் 6 பேருக்கு கொரோனா

ஆந்திர மாநிலம் கர்னூல் தொகுதி எம்.பி.யின் குடும்பத்தினர் 6 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

ஐதராபாத்:

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதைய நிலரப்படி, நாடு முழுவதும் 26 ஆயிரத்து 947 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வைரஸ் பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 914 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு இதுவரை 826 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய காரணங்களை தவிர மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆந்திர மாநிலத்திலும் ஆயிரத்து 97 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 231 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு ஆந்திராவில் 31 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், அம்மாநிலத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கர்நூல் தொகுதியை சேர்ந்த பாரளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ் குமாரின் குடும்பத்தினர் 6 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஞ்சீவ் குமாரின் தந்தை, சகோதரர் உள்பட குடும்பத்தினர் 6 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வைரஸ் உறுதி செய்யப்பட்ட அனைவரும் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குடும்பத்தினருக்கு வைரஸ் பரவியிருந்தாலும் எம்.பி. சஞ்சீவ் குமாருக்கு வைரஸ் பரவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »