Press "Enter" to skip to content

கொரோனாவுக்கா? பலியானவருக்கா? – பிரபல இறுதிச்சடங்கு நடனம் போன்று டிக்டாக்கில் காணொளி எடுத்த மருத்துவ ஊழியர்கள்

மருத்துவ ஊழியர்களில் சிலர் இணைந்து டிக்டாக்கில் கொரோனா வைரஸ் தொடர்பான சர்ச்சைக்குரிய வகையிலான டிக்டாக் வீடியோ ஒன்றை எடுத்துள்ளனர். இது தற்போது சமூகவலைதளத்தில் விவாதப்பொருளாகியுள்ளது.

வாஷிங்டன்:

மேற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று கானா. இந்நாட்டில் வினோதமான வழக்கம் ஒன்று உள்ளது.

அங்கு உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் போது இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வழியனுப்பி வைக்கும் விதமாக வித்தியாசமான நடனம் நடைபெறுவது வழக்கம். 

உயிரிழந்தவர்களை சவப்பெட்டியில் வைத்து கொண்டு தோளில் சுமந்தவாறு நடனமாடுவது போன்ற அந்த நிகழ்வு கடந்த 2015 ஆம் ஆண்டு தான் யூட்டியூபில் முதல் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டது. 

ஆனால், அந்த நடனம் அப்போது பெரும் பார்வையாளர்கள் இல்லாமலும் பிரபலம் அடையாமலும் இருந்தது.

இதற்கிடையில் உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்த சூழ்நிலையில் தான் இந்த இறுதிச்சடங்கு நடன வீடியோ டிக்டாக் உள்பட அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. உலகின் அனைத்து பகுதிகளிலும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் அதே போன்று பலரும் அந்த நடனத்தை வேடிக்கையாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் சுயாட்சி அதிகாரம் பெற்ற போர்டோ ரிகோ தீவில் சன் ஜூயன் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஊழியர்கள் சிலர் இணைந்து டிக்டாக்கில் இந்த இறுதிச்சடங்கு நடனம் போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். 

இதில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்கள் இணைந்து ஒரு நபரை தங்கள் தோளில் சுமந்தவாறு இறுதிச்சடங்கு நடனத்தை ஆடினர். 

மருத்துவ ஊழியர்கள் தோளில் சுமப்பது கொரோனாவால் உயிரிழந்த நபரா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. 

ஆனால், அந்த வீடியோவில் மருத்துவ ஊழியர்கள் கொரோனாவுக்கே இறுதிச்சடங்கு நடனம் ஆடியுள்ளனர் எனவும் அவர்கள் தோளில் சுமப்பது உயிருடன் இருக்கும் நபர்தான் எனவும் சமூக வலைதளத்தில் இரு வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.

கொரோனா வைரசை சாகடிப்பது போன்றும் அதற்குத்தான் இறுதிச்சடங்கு நடனம் ஆடியுள்ளனர் எனவும் இதை நகைச்சுவை உணர்வுடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என ஆதரவாக ஒரு தரப்பினரும், மருத்துவ ஊழியர்கள் செய்தது தவறான செயல் என மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். 

The corona tik tok nurse videos cannot get any wor… pic.twitter.com/vVNjbX5cNm

— ESSENTIAL Julia Song (@realjuliasong)

April 29, 2020

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »