Press "Enter" to skip to content

கனடாவில் தாக்குதல் ரக துப்பாக்கிகளுக்கு தடை

நோவா ஸ்காட்டியா துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் எதிரொலியாக 1,500 வகையான தாக்குதல் ரக துப்பாக்கிகளுக்கு கனடாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

நோவா ஸ்காட்டியா துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் எதிரொலியாக 1,500 வகையான தாக்குதல் ரக துப்பாக்கிகளுக்கு கனடாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஒட்டாவா:

கனடாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் கடந்த மாதம் 20-ந் தேதி 51 வயதான கேப்ரியல் வோர்ட்மேன் என்ற நபர் போலீஸ் உடையில் சென்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் பெண் போலீஸ் அதிகாரி உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

நோவா ஸ்காட்டியா துப்பாக்கிச்சூட்டில் உயிர்த்தியாகம் செய்த பெண் போலீஸ் அதிகாரி ஹெய்தி ஸ்டீவன்சன்

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் இந்த கொடூர தாக்குதல் ஒட்டுமொத்த கனடாவையும் உலுக்கியது. கனடாவில் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரிதிலும் அரிதானது என்பதால், இது அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான தாக்குதலாக பார்க்கப்பட்டது.இந்த நிலையில் நோவா ஸ்காட்டியா துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் எதிரொலியாக 1,500 வகையான தாக்குதல் ரக துப்பாக்கிகளுக்கு கனடாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெளியிட்டார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »