Press "Enter" to skip to content

வருமான வரி தாக்கல் கெடு 4 மாதங்கள் நீட்டிப்பு

2019-20 நிதியாண்டுக்கான வருமான வரை தாக்கல் கடைசி தேதி ஜூலை 31-ல் இருந்து நவம்பர் 30 வரை நீட்டிக்க்கப்படுள்ளது

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். 

அப்போது அவர் கூறுகையில்:-

2019-20 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குத்தாக்கல் செய்ய ஜூலை மாதம் 31 தேதி இறுதி நாளாக இருந்தது. ஆனால் தற்போது அந்த காலக்கெடு மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் வருமான வரித்தாக்கல் கெடு தேதி ஜூலை 31-ம் தேதியில் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »