Press "Enter" to skip to content

9 ஆயிரத்தை கடந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களின் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக விவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது. மாவட்ட வாரியாக முழு விவரத்தை காண்போம்.

சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 509 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 227 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் (சென்னை) வந்தவர்களில் நேற்று வரை 4 பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு விமான நிலைய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்தனர். 

இந்நிலையில், இன்றும் வெளிநாட்டில் இருந்து தமிழகம் (சென்னை) வந்த மேலும் 5 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டு விமான நிலைய தனிமைபடுத்தலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் கொரோனாவால் பரவியவர்களில் 6 ஆயிரத்து 984 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 176 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

அரியலூர் – 348

செங்கல்பட்டு – 416

சென்னை – 5,262

கோவை – 146

கடலூர் – 413

தர்மபுரி – 5

திண்டுக்கல் – 111

ஈரோடு – 70

கள்ளக்குறிச்சி – 61

காஞ்சிபுரம் – 160

கன்னியாகுமரி – 26

கரூர் – 54

கிருஷ்ணகிரி – 20

மதுரை – 123

நாகை – 47

நாமக்கல் – 77

நீலகிரி – 14

பெரம்பலூர் – 133

புதுக்கோட்டை – 6

ராமநாதபுரம் – 30

ராணிப்பேட்டை – 76

சேலம் – 35

சிவகங்கை – 12

தென்காசி – 53

தஞ்சாவூர் – 70

தேனி – 71

திருப்பத்தூர் – 28

திருவள்ளூர் – 492

திருவண்ணாமலை – 128

திருவாரூர் – 32

தூத்துக்குடி – 36

திருநெல்வேலி – 98

திருப்பூர் – 114

திருச்சி – 67

வேலூர் – 34

விழுப்புரம் – 306

விருதுநகர் – 44

விமான நிலைய தனிமைப்படுத்தல் – 9

மொத்தம் – 9,227

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »