Press "Enter" to skip to content

வந்தேபாரத் மிஷன் முதல் கட்டம் நிறைவு – சவுதி அரேபியாவில் இருந்து கொச்சி வந்தடைந்த 152 இந்தியர்கள்

சவுதி அரேபியாவில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் கேரளாவின் கொச்சிக்கு 152 இந்தியர்கள் நேற்று இரவு வந்திறங்கினர்.

திருவனந்தபுரம்:

கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அதன் காரணமாக விமான சேவைகள் முடங்கின.

வெளிநாடுகளில் சிக்கித் தவித்து, தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களை படிப்படியாக மீட்டு அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, முதல் கட்டமாக மே 7-ம் தேதி முதல் அதற்கான பயணத்தை தொடங்கியது.

பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 64 விமானங்கள் தயார்ப்படுத்தப்பட்டு அவர்களை மீட்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசு செயல்படுத்து வருகிறது

இந்நிலையில், வந்தே பாரத் மிஷனின் முதல் கட்டத்தின் இறுதி விமானத்தில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் கேரளாவின் கொச்சிக்கு 3 குழந்தைகள் உள்பட 152 இந்தியர்கள் வந்திறங்கினர். அவர்களுடன் மேலும் 31 பேர் மருத்துவ காரணங்களுக்காக இந்தியா வந்தடைந்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »