Press "Enter" to skip to content

இந்தியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்து

இந்தியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா நோயாளிகளுக்கு பாரம்பரியமிக்க ஆயுர்வேத மருந்துகளை கொடுத்து சோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை நேற்று 78 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எந்தவொரு மருந்தும் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் அறிகுறிகளுக்கான மருந்துகளும், நோய் எதிர்ப்புச்சக்தி மருந்துகளும், ஆரோக்கியமான உணவும்தான் வழங்கப்பட்டு, கொரோனா நோயாளிகள் குணம் அடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் அடுத்த வாரம் முதல் கொரோனா நோயாளிகளுக்கு பாரம்பரியமிக்க ஆயுர்வேத மருந்துகளை கொடுத்து சோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை மத்திய ஆயுஷ் துறை மந்திரி ஸ்ரீபாத் யெசோ நாயக் நேற்று டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கு நமது பாரம்பரியமிக்க மருத்துவ முறைவழிகாட்டும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »