Press "Enter" to skip to content

4-ம் கட்ட பொருளாதார சிறப்பு திட்டங்கள் – இன்றைய அறிவிப்புகள் எவை எவை?

பொருளாதார சிறப்பு திட்டங்களுக்கான நான்காம் கட்ட அறிவிப்புகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது வெளியிட்டு வருகிறார்.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு ‘தன்னிறைவு இந்தியா’ என்ற பெயரில் பல கட்டங்களாக நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

கடந்த மூன்று கட்ட அறிவிப்புகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயம் உள்பட பல்வேறு துறைகளுக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், தன்னிறைவு இந்தியா பொருளாதார சிறப்பு திட்டங்களின் நான்காம் கட்ட அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் இன்று 4 மணி முதல் வெளியிட்டு வருகிறார்.

இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கனிம வளம், விமானம், விண்வெளி, அணு சக்தி துறை உள்ளிட்ட 8 துறைகளுக்கான அறிவிப்புகளை நிதிமந்திரி வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »