Press "Enter" to skip to content

கொரோனா அப்டேட் – உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியுள்ளது.

ஜெனீவா:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்து 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 46 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பரவியவர்களில் 25 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் மேலானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 44 ஆயிரத்து 750 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »