Press "Enter" to skip to content

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு- சக்திகாந்த தாஸ்

ரெப்போ வட்டி விகிதம் 0.40 புள்ளிகள் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

கொரோனாவால் வீழ்ச்சி அடைந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக  பிரதமர் மோடி அறிவித்தார். இதனை அடுத்து, 5 கட்டமாக பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார்.

பல முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பங்களிப்பு அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

பொருளாதாரத்தை மீட்க 5 கட்டமாக நிதியமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்ட பின்னர், இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் 0.40 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகளில் கடன் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »