Press "Enter" to skip to content

ஓசிஐ அட்டை வைத்திருக்கும் இந்தியர்கள் நாடு திரும்பலாம்- கட்டுப்பாடுகளை தளர்த்தியது உள்துறை

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான அட்டை வைத்திருக்கும் இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி:

கொரோனா அச்சம் காரணமாக சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக விசா மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை தளர்த்தியது.

இந்நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான அட்டை (ஓசிஐ) வைத்திருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப அனுமதிக்கும் வகையில் பயணக் கட்டுப்பாடுகளில் மத்திய உள்துறை சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, ஓசிஐ அட்டை வைத்திருக்கும் இந்தியர்களுக்கு பிறந்த குழந்தைகள் (மைனர்) இந்தியா வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஓசிஐ அட்டை வைத்திருக்கும் இந்தியர்கள், அவர்களின் குழந்தைகள் அவசர தேவைகளுக்காக தாயகம் திரும்ப அனுமதி அளிக்கப்படும். குடும்ப உறுப்பினர்கள் இறப்பு உள்ளிட்ட அவசர காரணங்களுக்காக இந்தியாவிற்கு வர அனுமதி அளிக்கப்படும்.

தம்பதியரில் ஒருவர் இந்தியராக இருந்து, மற்றொருவர் ஓசிஐ கார்டு வைத்திருந்தால் அவர் நிரந்தரமாக இந்தியாவில் இருக்க அனுமதி அளிக்கப்படும். வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மணவர்களின் பெற்றோர் இந்தியாவில் இருந்தால், நாடு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »