Press "Enter" to skip to content

நாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற வடகொரியா

வடகொரியாவில் இருந்து தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை அதிகாரிகள் சுட்டுக்கொன்ற கொடூர நிகழ்வு நடந்துள்ளது.

உலகின் மிகவும் விசித்திரமான நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. அந்த நாட்டில் என்ன நடக்கிறது? என்று யாருக்கும் தெரியாது. அவர்களாகவே வெளியில் சொன்னால்தான் உண்டு. பத்திரிகையாளர்கள் அல்லது அதிகாரிகள் செய்திகளை கசிய விட்டால் அவர்கள் கதி திண்டாட்டம்தான்.

தற்போது உலகமே கொரோனா வைரஸ் என்ற அரக்கன் கையில் சிக்கியுள்ளது. முதன்முதலாக கொரோனா கண்டறியப்பட்ட சீனா நாட்டின் எல்லையுடன் அமைந்துள்ளது வடகொரியா.

ஆனால் இதுவரை வடகொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று கூறப்படுகிறது. அங்கு யாருக்கும் கொரோனா இருந்ததாக தகவல்கள் வெளிவரவில்லை.

இந்நிலையில்தான் ரியான்காங் மாகாணத்தில் உள்ள ஹியென்சன் என்ற இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க தம்பதி வாழ்ந்து வந்துள்ளனர். மனைவியன் இளம் சகோதரரின் 14 வயது மகன் இவர்களுடன் வசித்து வந்துள்ளார்.

வடகொரியாவில் கொரோனாவை தடுக்கும் விதமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பயனை எப்படியாக தென்கொரியாவுக்கு அனுப்பிவிட்டு சீனாவுக்கு தப்பியோட வேண்டும் என அந்த தம்பதி நினைத்துள்ளது. இருநாட்டிற்கும் இடையில் யாலு ஆறு ஓடுகிறது. இந்த ஆறு மூலம் கடக்க முயற்சி செய்தனர். ஆனால் வடகொரிய அதிகாகரிகள் இருவரையும் பிடித்துவிட்டனர். சிறுவனுக்கு 14 வயது என்பதால் அவனை விடுவித்துவிட்டனர். 

அதன்பின் கடந்த சில நாட்களாக அந்த தம்பதியை கொடுமைப்படுத்தி பின்னர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »