Press "Enter" to skip to content

சிகிச்சை அளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி – எகிப்தில் சுவாரசியம்

எகிப்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த டாக்டரை காதலித்து நோயாளி ஒருவர் கரம்பிடித்துள்ளார்.

கெய்ரோ:

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், எகிப்து நாட்டில் அரங்கேறிய காதல் உலகில் உள்ள அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஆயிஷா மொசபா என்ற பெண் எகிப்து நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். அந்த மருத்துவமனையில் முகமது பாமி என்பவர் கொரோனா நோய் தொற்றால் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அப்போது மருத்துவர் ஆயிஷா தான் அவருக்கு சிகிச்சை பார்த்துள்ளார். இதற்கிடையே அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இதையடுத்து இரண்டு மாதமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று குணமடைந்த முகமது பாமி மோதிரம் அணிந்து ஆயிஷாவிடம் காதலை வெளிப்படுத்தினார். இதற்கு சற்றும் மறுப்பு தெரிவிக்காமல் அவரது காதலை ஆயிஷாவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த ஜோடிக்கு பலரும் தங்களது பாராட்டுதலைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »