Press "Enter" to skip to content

ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும் – சுந்தர் பிச்சை

இன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் நின்றிடும் என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்:

மின்னசோட்டா தலைநகரான மின்னபோலிஸ் நகரில் கள்ளநோட்டு தொடர்பான விசாரணை ஒன்றின்போது, கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் எனும் நபர் போலீசாரின் பிடியில் உயிரிழந்தார்.

இந்த இறப்பிற்கு நீதி வேண்டி அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

கடந்த நான்கு நாட்களாக, நாடு முழுவதும் பரவியுள்ள இந்த போராட்டத்தால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. பல இடங்களில் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து 16 மாகாணங்களிலுள்ள 25 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பல இடங்களில் போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர்.

வெள்ளை மாளிகையின் அருகிலும் போராட்டங்கள் அதிகரித்துள்ளதால், வழக்கத்துக்கு மாறாக முதல்முறையாக வெள்ளை மாளிகையின் விளக்குகள் அனைத்தும் முற்றிலும் அணைக்கப்பட்டு அப்பகுதியே இருளில் மூழ்கியது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களான கூகுள் மற்றும் யூ டியூப் ஆகியவை இன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் நின்றிடும் என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும். துக்கம், கோபம், சோகம் மற்றும் பயத்தை உணருபவர்களே, நீங்கள் தனியாக இல்லை.

இன சமத்துவத்திற்கான எங்கள் ஆதரவையும், கருப்பின சமூகத்துடன் ஒற்றுமையையும், ஜார்ஜ் பிளாய்ட், பிரோனா டெய்லர், அஹ்மத் ஆர்பெரி மற்றும் குரல் இல்லாத மற்றவர்களின் நினைவாகவும் இதைப் பகிர்ந்து கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »