Press "Enter" to skip to content

வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் – மக்களுக்கு உத்தவ் தாக்கரே வேண்டுகோள்

நிசர்கா புயல் கரையை கடப்பதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மும்பை:

அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு நிசர்கா என பெயரிடப்பட்டுள்ளது.
 
நிசர்கா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த இரு நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நிசர்கா புயல் கரையை கடப்பதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

இதுதொடர்பாக அவர் கூறுகையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு பொதுமக்கள் வீட்டிலேயே தங்கி இருங்கள். யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »