Press "Enter" to skip to content

தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும்- ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

கொரோனா பகுதியில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி வளாகத்தில் அதிகாரிகளுடன் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பின் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் ஒரு மாதத்துக்கு முக கவசம் அணிய வேண்டும். அப்படி முக கவசம் அணிந்தால் கொரோனா பரவல் குறைய வாய்ப்பு உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம்.

தண்டையார்பேட்டை, ராயப்பேட்டை மண்டலம் சவாலான பகுதியாக இருப்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வார்டு வாரியாக கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை நடததப்பட்டது. தெருத்தெருவாக நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து பரிசோதனை நடத்தப்படுகிறது.

கொரோனா பகுதியில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உடன் இருந்தார். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »