Press "Enter" to skip to content

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்தியது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் கொரோனா வைரசுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதன்மூலம் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் சீனாவை முந்தியுள்ளது.

இஸ்லாமாபாத்:

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்து 264 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 801 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் கொரோனாவுக்கு 82 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,770 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »