Press "Enter" to skip to content

எல்லைகளை பாதுகாக்கக்கூடிய வலிமை பொருந்திய நாடு இந்தியா – அமித் ஷா பெருமிதம்

கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களுக்கு தலைவணங்குகிறேன் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

மத்திய உள்துறை மந்திரியும் பா.ஜ.க. தலைவருமான அமித் ஷா  பீகார் மக்களிடையே வீடியோ கான்பரன்சிங் மூலம் பீகார் ஜான்சம்வத் பேரணியில் உரையாற்றியதாவது:-

தங்கள் உயிரைப் பணயம் வைத்து கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களுக்கு தலை வணங்குகிறேன். சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்பு அளப்பரியது.

முன்பு நமது எல்லைக்குள் யார் வேண்டுமானாலும் நுழைந்த ஒரு காலம் இருந்தது. டெல்லியில் இருந்த அரசு பாதிக்கப்படமால் இருக்க நமது ராணுவ வீரர்களின் தலை துண்டிக்கப்பட்டது.

உரி மற்றும் புல்வாமா எங்கள் காலத்தில் நடந்தது. இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கை உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பிறகு அதன் எல்லைகளை பாதுகாக்கக்கூடிய வலிமை பொருந்திய நாடு இருந்தால், அது இந்தியா தான் என்று முழு உலகமே ஒப்புக்கொள்கிறது என தெரிவித்தார்.
.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »