Press "Enter" to skip to content

ஆளுநரின் உத்தரவு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மருத்துவமனைகளில் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. தற்போதுதான் இந்தியாவில் அதிகரிக்கும் காலம் என கணிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைகளில் அதிகமான படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்து தயார் நிலையில் வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன.

பொதுவாக டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் அரியானா, உத்தர பிரதேசம், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எல்லாவிதமான நோய்களுக்கும் சிகிச்சை பெறுவார்கள். ஆனால், பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டுள்ளன.

இதற்கிடையில், டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் டெல்லிவாசிகளுக்கு சிகிச்சை கிடையாதா? என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளதாக கூறி, டெல்லி மருத்துவமனைகளில் டெல்லி வாசிகளுக்கே முன்னுரிமை என்று டெல்லி அரசு முடிவு எடுத்தது.

ஆனால், டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் இன்று மாலை ‘‘டெல்லியில் வசிக்காதவர்களுக்கு சிகிக்கை கிடையாது என்ற நிலை இருக்கக் கூடாது. அதிகாரிகள் இதை உறுதி செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

இந்நிலையில் துணைநிலை ஆளுநரின் உத்தரவு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது என்று டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் ‘‘துணைநிலை ஆளுநரின் உத்தரவு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. டெல்லி மக்களுக்கு இது மிகப்பெரிய சவால். கொரோனா தொற்று நெருக்கடிக்கு இடையில் நாட்டின் எல்லாப் பகுதியிலும் இருந்து வரும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பது சவாலானது. அனைவருக்கும் சிகிச்சை அளிக்க முயற்சி செய்வோம்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »