Press "Enter" to skip to content

73 வயதில் 73 சொத்துக்கள் – லாலு பிறந்தநாளில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்

பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் 73-வது பிறந்தநாளில் அவரது குடும்பத்தினர் 73 சொத்துக்களை சேர்த்துள்ளதாக வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.

பாட்னா:

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்  மந்திரியாக பதவி வகித்தவரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜார்க்கண்ட் மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஜூன் 7-ம் தேதி உள்துறை மந்திரி அமித்ஷா ஆன்லைன் மூலம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
பீகாரில் ஆளும் பா.ஜ.க. – ஜக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு எதிராக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இதற்கிடையே, லாலு பிரசாத் யாதவ் தனது 73வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அவரது கட்சி தொண்டர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.

இந்நிலையில், தலைநகர் பாட்னாவில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிகாரத்தைப் பயன்படுத்தி 73 சொத்துக்களை சேர்த்துள்ளதாக வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த பேனரில், லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சேர்த்ததாக 73 சொத்துக்கள் மற்றும் அவற்றின் மதிப்பு விவரங்களை பட்டியலிடப்பட்டு இருந்தது.

ஐக்கிய ஜனதா தளம் சார்பில் வைக்கப்பட்ட இந்த பேனரில் லாலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு, இந்த சொத்துப்பட்டியல் இன்னமும் நீளும் என கிண்டலடித்து வைக்கப்பட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »