Press "Enter" to skip to content

ஒரே நாளில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை – தமிழகத்தின் நம்பிக்கை

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 24 ஆயிரத்து 621 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான நேற்றைய விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டத்து. 

அந்த தகவலின் படி மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 174 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 193 ஆகஅதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 21 ஆயிரத்து 990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், நேற்று ஒரே வைரஸ் பரவியவர்களில் 842 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆயிரத்து 624 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று மட்டும் 48 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க பரிசோதனையின் எண்ணிக்கை முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

பரிசோதனையை அதிகரிப்பதாலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை குறித்த வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.

இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 24 ஆயிரத்து 621 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் 25 ஆயிரத்து 463 சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் நேற்று 24 ஆயிரத்து 621 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 2 ஆயிரத்து 174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 37 ஆயிரத்து 787 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 73 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது.

பரிசோதனையை அதிகரிப்பதன் மூலமே வைரஸ் பரவியவர்களை கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதாலேயே கொரோனாவை விரைவாக கட்டுப்படுத்த முடியும் என

உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »