Press "Enter" to skip to content

ஆஸ்திரேலியா மீது சைபர் தாக்குதல் : அரசின் முக்கிய தகவல்களை திருட முயற்சி

ஆஸ்திரேலிய அரசு மற்றும் தனியார் துறைகள் மீது மிகப்பெரிய அளவில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்கார்ட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

சிட்னி:

ஆஸ்திரேலியாவின் அரசு மற்றும் தனியார் துறையின் கணினி அமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். 

இந்த தாக்குதல் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளது. இது எப்போது தொடங்கியது என்ற தகவல் வெளியாகவில்லை.

அந்நாட்டின் அரசு மற்றும் தனியார் துறைகளின் முக்கிய தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு மற்றும் தனியாரின் இணையதள பக்கங்களுக்குள் நுழைந்துள்ள ஹேக்கர்கள் முக்கியமான உள்கட்டமைப்பு, அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள், முதலீடு போன்றவை தொடர்பான பல்வேறு தகவல்களை திருடி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போதுவரை சைபர் தாக்குதல் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளதாகவும், அதை சரிசெய்ய தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சைபர் தாக்குதலுக்கு ஒரு நாடு பின்னனியில் இருப்பதாக குற்றச்சாட்டியுள்ளார்.

கொரோனா விவகாரத்தில் ஆஸ்திரேலியா – சீனா இடையே மோதல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »