Press "Enter" to skip to content

இந்திய படைகளுக்கு முழு சுதந்திரம் – பாதுகாப்புத்துறை கூட்டத்தில் முடிவு

இந்திய படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்க முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி:

சீன எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், பாகிஸ்தான் உடனான எல்லைப் பாதுகாப்பு குறித்தும் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துடன் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். 

பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் விமானம், ராணுவம், கப்பல் ஆகிய முப்படை தளபதிகளும் பங்கேற்றனர்.

இந்நிலையில், சீனாவின் எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் சமாளிக்க இந்திய படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்க இந்திய பாதுகாப்புத்துறை மந்திரியின் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், எல்லையில் சீன படைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்க ராணுவ உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் சீனா தவறான செயலை செய்தால் தக்க பதிலடி தர இந்தியப் படைகள் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »