Press "Enter" to skip to content

வந்தே பாரத் திட்டத்தின் இந்திய விமானங்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள் விதித்த அமெரிக்கா

ஏர் இந்தியா மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த இந்தியாவின் வந்தே பாரத் சிறப்பு விமான சேவைக்கு அமெரிக்கா அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வாஷிங்டன்:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தியர்களை தாய்நாடு அழைத்து வரும் விதமாக மத்திய அரசு ஏர் இந்தியா விமான சேவை மூலம் வந்தே பாரத் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாய்நாடு அழைத்து வரப்பட்டு வருகின்றனர். வந்தே பாரத் திட்டம் முற்றிலும் ஏர் இந்தியாவின் மூலமாகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் உள்ள தனியார் விமான நிறுவனங்களோ, வெளிநாட்டு விமான நிறுவனங்களோ இந்த திட்டத்தில் ஈடுபட இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை.

இதற்கிடையில், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வணிக ரீதியில் ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களை இயக்குவதாக அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. 

மேலும், இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தை காட்டி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும் வர்த்தக ரீதியிலான பயணிகள் விமான சேவையை தொடங்க இந்திய அரசு பிற நாட்டு விமான நிறுவனங்களுக்கு

அனுமதி அளிக்காமல் இருந்து வருகிறது. 

இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தின் பெயரில் ஏர் இந்தியா நிறுவனம் தங்கள் நாட்டில் இருந்து வர்த்தக ரீதியில் இந்தியாவுக்கு விமான சேவையை இயக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

மேலும், ஏர் இந்தியாவின் இந்த செயல் வர்த்தக ரீதியில் நிறுவனங்களுக்கு இடையே பாகுபாட்டை உருவாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து இனி வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்திய விமான நிறுவனம் தனது சேவையை தொடர அந்நாடு வினாப்போக்குவரத்துத்துறை அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

அதன்படி, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கோ அல்லது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கோ வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்தியா விமான சேவையை தொடர வேண்டுமானால் 30 நாட்களுக்கு முன்னதாகவே அமெரிக்க விமான நிறுவனத்திடம் ஏர் இந்தியா உரிய முன்அனுமதி 

வாங்க வேண்டும். 

அவ்வாறு அனுமதி வாங்கவில்லை என்றால் அமெரிக்காவில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் மூலமான ஏர் இந்தியா விமான சேவைகள் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை வர்த்தக ரீதியில் உள்ள பாகுபாட்டை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என அமெரிக்க விமான போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. 

வந்தே பாரத் திட்டத்தில் செயல்பாட்டில் உள்ள ஏர் இந்திய விமான சேவைகளுக்கு அமெரிக்கா கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், இதே போன்று ஏர் இந்தியா மீது இன்னும் சில நாடுகள் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »