Press "Enter" to skip to content

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள் – மாவட்ட வாரியாக விவரம்

தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரசுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 516 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது.  

இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 28 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் நேற்று ஒரே நாளில் 1,227 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடலில் ஏற்கனவே எந்த நோய்களும் இல்லாமல் பூரண நலத்துடன் இருந்தவர்கள் பலரும் கொரோனா வைரசுக்கு பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது.

இந்த மொத்த எண்ணிக்கையில் சென்னையில் மட்டும் 645 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. 

மாவட்டவாரியாக கொரோனா உயிரிழப்பு விவரம்:

செங்கல்பட்டு – 57

சென்னை – 645

கோவை – 1

கடலூர் – 5

திண்டுக்கல் – 4

ஈரோடு – 1

கள்ளக்குறிச்சி – 1

காஞ்சிபுரம் – 14

கன்னியாகுமரி – 1

கிருஷ்ணகிரி – 2

மதுரை – 9

நாமக்கல் – 1

புதுக்கோட்டை – 2

ராமநாதபுரம் – 3

ராணிப்பேட்டை – 2

சேலம் – 1

சிவகங்கை – 1

தஞ்சாவூர் – 1

தேனி – 2

திருவள்ளூர் – 44

திருவண்ணாமலை – 7

தூத்துக்குடி – 4

திருநெல்வேலி – 5

திருச்சி – 3

வேலூர் – 3

விழுப்புரம் – 12

விருதுநகர் – 1

விமானநிலைய கண்காணிப்பு 

வெளி நாடு – 1

மொத்தம் – 833 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »