Press "Enter" to skip to content

பிரேசிலை விரட்டும் கொரோனா – ஒரே நாளில் 1100க்கும் அதிகமானோர் பலி

பிரேசில் நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1100-ஐ கடந்துள்ளது.

ரியோ டி ஜெனிரோ:

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிரேசில் நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1100-ஐ கடந்துள்ளது.

பிரேசிலில் கடந்த சில நாட்களாக 20 முதல் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

பிரேசிலில் ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து, அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.92 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் 1100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 53, 870ஐ கடந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.5 லட்சத்தை நெருங்குகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »