Press "Enter" to skip to content

சதம் அடித்தவர் கொரோனாவில் இருந்து மீண்ட அதிசயம்

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் சதம் அடித்து 114 வயதான அபா திலாகுன் வேர்டேமிக்கேல் என்ற மனிதர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளார்.

அடீஸ் அபாபா:

கொரோனா வைரஸ் தொற்று முதியவர்களைத்தான் அதிகமாக தாக்குகிறது, முதியவர்களைத்தான் பெருமளவில் பலி கொள்கிறது.

ஆனால் அதிலும் சில அதிசயங்கள் நடக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில், ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் சதம் அடித்து 114 வயதான அபா திலாகுன் வேர்டேமிக்கேல் என்ற மனிதர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளார்.

இவர் கொரோனா தொற்று உறுதியான நிலையில், தலைநகர் அடீஸ் அபாபா நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்கக்கப்பட்டார். அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னதாகவே அவருக்கு சிகிச்சை அளிக்கத்தொடங்கி விட்டனர். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஒரு கட்டத்தில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. உடனே அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி இருக்கிறார்கள். ஒரு வார காலத்துக்கு மேலாக இப்படி ஆக்சிஜன் செலுத்தி இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அவர் குணம் அடைந்துள்ளார்.

14 நாட்களுக்கு பிறகு இப்போது அவர் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு 114 வயது என்பதை உறுதிப்படுத்த பிறப்பு சான்றிதழ் இல்லாதபோதும், அவருக்கு நிச்சயம் 109 வயது இருக்கும் என டாக்டர்கள் கணித்துள்ளனர். 1935-1941 இடையே நடந்த இத்தாலி ஆக்கிரமிப்பு, 1974-ம் ஆண்டு பேரரசர் ஹெயில் செலாசி பதவி நீக்கம், 1991-ல் மார்க்சிஸ்டு டெர்க் ஆட்சியின் வீழ்ச்சி என பல வரலாற்று நிகழ்வுகளை கண்ட இவர் இப்போது கொரோனாவையும் சந்தித்து மீண்டிருப்பது அங்கு அதிசயமாக பார்க்கப்படுகிறது. தற்போது அவர் தனது பேரன் வீட்டில், அவரது பராமரிப்பில் இருக்கிறார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »