Press "Enter" to skip to content

அட்டர்னி ஜெனரல், சொலிசிடர் ஜெனரலின் பதவிக்காலம் நீட்டிப்பு

அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் மற்றும் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோரது பதவிக்காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி:

மத்திய அரசின் தலைமை வக்கீலாக (அட்டர்னி ஜெனரல்) பதவி வகித்து வருபவர் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் கே.கே. வேணுகோபால். இவரது பதவிக் காலம் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், அட்டர்னி ஜெனரலான கே.கே. வேணுகோபாலின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், சொலிசிடர் ஜெனரலாக துஷார் மேத்தாவின் பதவிக்காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவரது பதவிக்காலம் ஜூலை 1 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும், மத்திய அரசுக்கு புதிதாக 5 துணை சொலிசிடர் ஜெனரல்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த இதற்கான ஒப்புதலை அளித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »