Press "Enter" to skip to content

தங்கம் கடத்தல் வழக்கில் ஒருவருக்கு பார்வை அவுட் அறிவிப்பு

கேரளா தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக துபாயில் வசிக்கும் பைசல் பரீத் என்பவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கொச்சி:

கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தூதரக முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயன் மனைவி சௌமியா, ரமீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்ஐஏ விசாரணை ஒருபுறமிருக்க, தங்க கடத்தலில் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தங்கக் கடத்தலில் ரமீசுடன் தொடர்புடைய 5 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில் கேரளா தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக துபாயில் வசிக்கும் பைசல் பரீத் என்பவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இன்டர்போல் மூலம் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க என்ஐஏ நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தங்கத்தை அனுப்பியதாக கருதப்படும் பைசல் பரீத் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »